கோவை மாநகராட்சி வார்டு 97 திமுக வேட்பாளர் பரிசு பொருட்கள் கொடுப்பதாகவும், தேர்தல் விதிகளை மீறுவதாக, சுயேட்சை வேட்பாளர் ஆட்சியரிடம் புகார்

திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், பரிசு பொருட்கள் கொடுப்பதாகவும், நிரஞ்சனா தேவி என்ற சுயேட்சை வேட்பாளர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.


கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பல்வேறு கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை மாநகராட்சி 97 வது வார்டு திமுக வேட்பாளராக, கோவை திமுக மாவட்ட பொறுப்பாளர் (கிழக்கு) மருதமலை சேனாதிபதியின் மகள், நிவேதா சேனாதிபதி போட்டியிடுகிறார். அதே வார்டில் சுயேச்சை வேட்பாளராக, நிரஞ்சனா தேவி என்பவர் போட்டியிடுகிறார்.



இந்த நிலையில், திமுக வேட்பாளர், நிவேதா சேனாதிபதி, அப்பகுதி மக்களுக்கு பரிசுப்பொருட்கள் தருவதாகவும், எனவே அந்த வார்டில் தேர்தலை ரத்து செய்யுமாறு அல்லது அந்த வேட்பாளர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், திமுக வேட்பாளர் நிவேதா சேனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் மேற்கொள்வதாகவும், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுயேட்சை வேட்பாளரின் இந்த புகார் மனு, நிவேதா சேனாதிபதி ஆதரவாளர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சுயேச்சை வேட்பாளர் நிரஞ்சனாதேவி அளித்த புகாரில் திமுக வேட்பாளரின் பெயரை நிவேதா என்பதற்கு பதிலாக நிவேதிதா என தவறுதலாக குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...