கோவை மாநகராட்சியில் தனது வார்டில் தேங்கியுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்த சுயேட்சை வேட்பாளர்..!

மேலும், தான் வெற்றிபெற்றால் அந்த வார்டில் உள்ள 56 தெருக்களிலும் அனைத்து சாக்கடைகளும் முழுமையாக உடனடியாக சுத்தம் செய்யப்படும் என்றார்.



கோவை: கோவை மாநகராட்சி 32வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் என்பவர் தனது வார்டில் தேங்கியுள்ள சாக்கடைகளை சுத்தம் செய்து வாக்கு சேகரித்தார்.



நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 32வது வார்டில் சுயேட்சையாக போட்டியிடும் மகேஸ்வரன் என்ற வேட்பாளர் இன்று தனது வார்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அங்கிருந்த நபர் ஒருவர் தங்களது பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக சாக்கடை சுத்தம் செய்யாமல் அப்படியே இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.



இதையடுத்து, மகேஸ்வரன் தனது ஆடைகளை கழட்டி விட்டு தனது மனைவியுடன் சேர்ந்து சாக்கடையில் இறங்கி அடைப்புகளை சரி செய்தார். அதன்பின்னர் அந்த தெருவில் இருந்த அனைத்து வீடுகளுக்கும் சென்று நோட்டீஸ்களை வழங்கி தனக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், தான் வெற்றிபெற்றால் அந்த வார்டில் உள்ள 56 தெருக்களிலும் அனைத்து சாக்கடைகளும் முழுமையாக உடனடியாக சுத்தம் செய்யப்படும் என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...