கோவையில் பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நாளை பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரம்..!

நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.


கோவை: கோவையில் நாளை 16ம் தேதி பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு பகுதிகளில் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் தே.மு.தி.க., சார்பில் 42 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கூட்டணியின்றி தனித்து களம் காணும் அவர்களுக்கு ஆதரவாக, பிரச்சாரம் மேற்கொள்ள அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா நாளை கோவை வருகிறார்.

நாளை காலை வேட்பாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் அவர், மாலை 6 மணிக்கு வேலாண்டிபாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அதனை தொடர்ந்து சிங்காநல்லூர், மசக்காளிபாளையம் மைதானத்தில், மாலை, 8:00 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தில், தேர்தல் பிரசார கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...