கேசிபி நிறுவனம் ஆலம் கோல்டன் டைமண்ட் நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களின் நிரந்தர வைப்புத் தொகை 110 கோடியை முடக்கி ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணியின் கேசிபி நிறுவனம் ஆலம் கோல்டன் டைமண்ட் நிறுவனம் உட்பட தனியார் நிறுவனங்களின் நிரந்தர வைப்புத் தொகை 110 கோடியை முடக்கி ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. அவர் ஆட்சியில் இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திமுக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது.
அதை தொடர்ந்து, ஆளுநரிடம் அவர் மீது பல்வேறு விதமான ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அதற்கான அறிக்கையை வழங்கியது. மேலும், திமுக ஆட்சி வந்தவுடன் அவருக்கு சொந்தமான தமிழகத்தில் உள்ள 47க்கும் மேற்பட்ட இடங்களில் ஊழல் தடுப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
இதில் பல்வேறு ஆவணங்கள், பொருட்கள் கைப்பற்றப் பட்டு விசாரணை வளையத்துக்குள் எஸ்.பி வேலுமணி உள்ளார்.
இந்த நிலையில், நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை நீதிமன்றத்தில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் எஸ் பி வேலுமணியின் ஜேசிபி நிறுவனம் ஆழம் கோல்டன் அன்ட் டைமண்ட் நிறுவனம் உட்பட பல்வேறு நிறுவனங்கள் நிரந்தர வைப்பு நிதி அவர்கள் முறைகேடாக சொத்து சேர்த்ததில் இருந்து சேமிக்கப் பட்டதா என்ற சந்தேகம் உள்ளதால் அவைகள் அனைத்தையும் முடக்கி உத்தரவிட்டது.
லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற உத்தரவில் 110 கோடி நிரந்தர வைப்பு நிதியாக உள்ளது தெரிய வந்து முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.