உற்பத்தி தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருட்களின் விலை ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் 3,000 ரூபாய் வரை குறைந்து மீண்டும் தற்போது ஒரு டன் 16,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை: கோவையில் செயல்படும் உற்பத்தி தொழில் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப் பொருட்களின் விலை ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு டன் 3,000 ரூபாய் வரை குறைந்து மீண்டும் தற்போது ஒரு டன் 16,000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது தொழில் துறையினர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர் சங்கத்தின்(COTMA) தலைவர், சிவக்குமார் கூறியதாவது:-
தொழில் நகரான கோவையில் செயல்பட்டு வரும் உற்பத்தி பிரிவை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மூலப்பொருட்கள் விலை தாறுமாறாக அதிகரித்தது மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியது.
டிசம்பர் மாத இறுதியில் மூலப்பொருட்கள் விலை குறையத் தொடங்கியது தொழில் முனைவோர் மத்தியில் சிறிது நிம்மதியை ஏற்படுத்தியது. ஆனால் மூலப்பொருட்கள் விலை 3,000 ரூபாய் குறைந்து ஒரே மாதத்தில் 16 ஆயிரம் ரூபாய் அதிகரித்துள்ளது தொழில் முனைவோர் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு உடனடியாக மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தால் மட்டுமே கோவை மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள குறு சிறு தொழில் நிறுவனங்களைக் காப்பாற்ற முடியும்." இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(SIEMA) தலைவர், கார்த்திக் கூறியதாவது:-
ஒவ்வொரு உற்பத்தி பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனத்துக்கும் மூலப்பொருட்கள் என்பது அடிப்படையான ஒன்றாகும். ஸ்டீல், அலுமினியம், காப்பர் உள்ளிட்ட முக்கிய மூலப் பொருட்கள் விலை பல மடங்கு அதிகரித்து வரும் காரணத்தால் தொழில் துறையினர் மிகுந்த நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
தொழில் அமைப்புகள் சார்பில் தொடர்ந்து மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை அனுப்பி வருகிறோம். நாட்டின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியில் குறு, சிறு தொழில் நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் நிறுவனங்கள் வளர்ச்சிக்கு உதவும் வகையில் மூலப்பொருட்கள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவே தொழில் முனைவோரின் எதிர்பார்ப்பாகும்." இவ்வாறு அவர் கூறினார்.
மூலப்பொருட்கள் விலை உயர்வு குறித்த பட்டியல்(ஒரு டன்) ஜனவரி மற்றும் பிப்ரவரி 2022
...
Mild Steel: Rs.65,000Rs.70,000
EN 8 steel: Rs.70,000Rs.75,000
SS 304 steel : Rs.2,60,000Rs.2,70,000
Pig Iron: Rs.49,500Rs.53,000
Coal: Rs.50,000Rs.57,000
Aluminium: Rs.2,52,000Rs.2,68,000