மக்கள் அதிமுகவின் பக்கம் என திருப்பூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிறைவேற்றியது அதிமுக அரசு எனவே மக்கள் அதிமுகவின் பக்கம் என திருப்பூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.


திருப்பூர்: நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிறைவேற்றியது அதிமுக அரசு எனவே மக்கள் அதிமுகவின் பக்கம் என திருப்பூரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.



திருப்பூர், மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சந்திராபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை மேற்கொண்டார்.

இதில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:-



நான் முதலமைச்சராக இருந்த போது ஊரக உள்ளாட்சி தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தினோம். அதிமுகவில் ஏற்பட்ட சிறிய சுணக்கத்தை திமுக பயன்படுத்தி ஆட்சிக்கு வந்துவிட்டனர்.

எந்த ஆட்சி சிறந்தது என மக்களுக்கு புரிய வைத்தால் நாம் ஜெயித்து விடலாம். ஊடகத்தின் உரிமையை கொடுத்தது அதிமுக என குறிப்பிட்டார். எதையும் எதிர்பாராமல் உழைக்கின்ற நிர்வாகிகள் நிறைந்த கூட்டம் அதிமுகவில் மட்டுமே உள்ளது.



மேலும், மாநகராட்சியில் எம்.எல்.ஏ வை விட மேயருக்கு தான் அதிகாரம் அதிகம். அதனை நாம் வென்று எடுக்க வேண்டும். நீட் தேர்வை பொறுத்தவரை எந்த கட்சியும் கோரிக்கை வைக்காத போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இட ஒதுக்கீடு நிறைவேற்றியது அதிமுக அரசு என கூறினார்.

அதில் ஏராளமான ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன் அடைந்துள்ளனர். மேலும், பொருளாதார சூழ்நிலை காரணமாக இடம் கிடைத்தும் படிக்க முடியாதவர்கள் குறித்து தகவல் அறிந்து கட்டணம் இல்லாமல் 7.5 சதவீத ஒதுக்கீடு மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.



அதிமுக ஆட்சியில் உடுமலையில் கால்நடை மருத்துவக்கல்லூரி கொண்டு வந்தோம். ஆகையால், மக்கள் அதிமுகவின் பக்கம் உள்ளனர் என தெரிவித்தார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...