கோணவாய்க்கால் பாளையம் பகுதியில், குடிபோதையில் வந்த வாலிபர் கூலித்தொழிலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்த நிலையில், சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கோவை: குடிபோதையில் வந்த வாலிபர் கூலித்தொழிலாளியை தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்தநிலையில், சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கோவை போத்தனூர் கோணவாய்க்கால் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 40) கூலித்தொழிலாளி. இவர் நேற்று இரவு போத்தனூர் பகுதியில் நின்று இருந்தார்.
அப்போது அங்கு வாலிபர் ஒருவர் குடிபோதையில் அந்த வழியாகச் சென்றவர்களைத் தடுத்து நிறுத்தி தகராற்றில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்த கந்தசாமி அந்த வாலிபரிடம் சென்று எதற்காக ரோட்டில் செல்பவர்களிடம் தகராற்றில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறாய் என கேட்டார்.
இதனால் கந்தசாமிக்கு, அந்த வாலிபருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கந்தசாமியைத் தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் கந்தசாமி சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த வாலிபர் பயந்து போய் அங்கிருந்து தப்பி ஓடினார். அந்த வழியாக சென்றவர்கள் கந்தசாமி இறந்து கிடப்பதைப் பார்த்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கந்தசாமியின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த டேவிட் ராஜா (22) என்பவர் கந்தசாமி அடித்துக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டேவிட் ராஜாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.