கோவையில் சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள்!! தந்தை பெரியார் படிப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!!

கோவை காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் காதலர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



கோவை: கோவையில் காதலர் தினத்தை முன்னிட்டு, சுயமரியாதை திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள் தந்தை பெரியார் படிப்பகத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.



சர்வதேச காதலர் தின விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், காந்திபுரத்தில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் காதலர் தின விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.



அப்போது, வடவெள்ளியை சேர்ந்த ஜோசப், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த செளமியா என்ற காதல் ஜோடிக்கு தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் திருமணம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் இதுகுறித்து கூறுகையில்,

காதல் திருமணத்திற்கு சில மதவாத அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. காதல் திருமணம் மூலம் மட்டுமே மதம், சாதிகளை ஒழிக்க முடியும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.

கொரோனா கால கட்டத்தில் 400 காதல் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இதுவரை 6 ஆயிரம் திருமணம் நடத்தி வைத்திருப்பதாகவும், திருமணம் செய்தவர்கள் பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களின் வாரிசுகளுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு காதல் ஜோடிகள் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

காதலுக்கும், காதலர்களுக்கும் சாதி, மதம் கிடையாது. எனவே அதை வைத்து காதலர்களை பிரிக்கக்கூடாது. காதலர் தினத்தில் காதலனை கைப்பிடித்ததால் மகிழ்ச்சி அடைவதாக புதுமண தம்பதிகள் தெரிவித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...