கோவையில் யூடியூப் மூலம் அறிமுகமாகி 300 கோடி மோசடி செய்த நபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு..!

போரெக்ஸ் டிரேட் எனப்படும் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி 300 கோடி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது.


கோவை: கோவையில் யூடியூப் மூலம் அறிமுகமாகி 300 கோடி மோசடி செய்த நபரை கைது செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விமல்குமார். இவர் மிஸ்டர் மணி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சேனல் லைவ்விற்காக கோவை காளப்பட்டி பகுதிக்கு அவ்வப்போது செல்லும் அவர், அங்குள்ள பொது மக்களிடம் பணத்தை போரெக்ஸ் டிரேட் எனப்படும் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசி வந்துள்ளார். இதனை அவரது சேனலிலும் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து, இதனை பார்வையிடுபவர்களை போன் மூலம் அழைத்து, நேரடியாக கூட்டம் நடத்தி, பணத்தை தன் மூலமாக முதலீடு செய்தால் மாதம் 8% ஊக்கத்தொகையை வட்டியாக வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இதற்காக மாவட்டம் தோறும் அலுவலகம் அமைத்து இண்டிரொடியூசிங் புரோக்கர் எனப்படும் அறிமுக நபர்களை மாதம் 50 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் நியமித்து, அவர்கள் மூலம் பணத்தை திரட்டியுள்ளார்.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் சுமார் 300க்கும் மேற்பட்டோர் தலா ஒரு லட்சம் வீதம் பணம் செலுத்தியுள்ளனர்.

சுமார் 300 கோடி ரூபாய் பணம் திரட்டப்பட்டிருந்த நிலையில், ஊதியத்தையும் கொடுக்காததோடு, வட்டி தொகையையும் தராமல் இருந்ததால் சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் விமல்குமாரையும் அவரது மனைவி ராஜேஸ்வரியையும் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.

ஆனால், செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதோடு, அலுவலகமும் மூடப்பட்டிருப்பதால் ஏமாற்றப்பட்டது தெரியவந்தது.



இதையடுத்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் முக கவசம் அணிந்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.



மேலும், விமல்குமாரையும், ராஜேஸ்வரியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...