காதலர் தினம்: ஊட்டியில் ரோஜா விற்பனை அமோகம்..!

நீலகிரி மாவட்டத்திற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.


நீலகிரி: காதலர் தினத்தை முன்னிட்டு ஊட்டியில் ரோஜா விற்பனை அமோகமாக உள்ளது.

ஊட்டியில் காதலர் தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ரோஜாக்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.

பெங்களூர் ஓசூரில் இருந்து கொண்டு வரப்பட்ட, ரோஜா உட்பட பல்வேறு மலர்களின் விற்பனை குன்னுாரில் களை கட்டியுள்ளது.

உலகம் முழுதும் இன்று 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு பெங்களூரு, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரோஜா மலர்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதனால், குன்னுார் சிம்ஸ்பூங்கா உட்பட சுற்றுலா மைய பகுதிகளில் உள்ள கடைகளுக்கு ரோஜா வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரு ரோஜா மலர், 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல, ஒரு லில்லியம் மலர், 75 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 'கார்னேஷன், ஸ்பிரே கார்னேஷன், கிரிசாந்தம், பேர்ட் ஆப்பேரடைஸ், ஜெர்பரா, ஆந்தோரியம்,' உள்ளிட்ட மலர்கள் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இந்த மலர்களுக்கு கடைகளில், ஆன்லைனில் முன்பதிவும் செய்யப்படுகிறது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...