கோவையில் பரபரப்பு..! அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையை விட்டு வெளியேற கூறி அதிமுக எம்.எல். ஏ க்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் போராட்டம்..!

அதிமுகவினர் பிரச்சாரம் மேற்கொள்ளும் பல இடங்களில் காவல் துறையினர் வழக்குப் போடுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி, கோவை ராமநாதபுரம் காவல் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை:திமுகஅமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையை விட்டு வெளியேற கூறி காவல் நிலையத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 100க்கும் மேற்ப்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சியினரால் தீவிர பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே, அதிமுக வினர் பிரச்சாரம் மேற்கொள்ளும் பல இடங்களில் காவல் துறையினர் வழக்குப் போடுவதாக, அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். 



இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் திரண்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜுனன், பி.ஆர்.ஜி அருண்குமார், ஜெயராம் உட்பட 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் தூண்டுதலின் பெயரால் அதிமுகவினர் மீது காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதாக குற்றம்சாட்டினர்.

எனவே, அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவையை விட்டு வெளியேறுமாறு, முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...