இன்று பிப்ரவரி 14, கோவை குண்டு வெடிப்பு தினம்: பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீசார்...!

இரயில் நிலையம், கோவை பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில், நாள் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.


கோவை: இன்று கோவை குண்டு வெடிப்பு தினத்தையொட்டி 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில், 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்,200 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இன்று, பிப்ரவரி 14 ஆம் தேதி குண்டு வெடிப்பு தினம் அனுசரிக்கப்படுவதை ஓட்டி, கோவையில் போலீசார் நேற்றுமுதல் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகர காவல் ஆணையர், பிரதீப் குமார் உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் தலைமையில், மாநகர பகுதியில்2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல, புறநகர் பகுதிகளில் 1000 போலீசார் கண்காணிப்பு பணிக்காகநியமிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, கோவை மாநகர காவல் நிலையத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் குண்டுவெடிப்பு தினம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கோவையில் அமல்படுத்தப்படவேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல், குண்டு வெடிப்பின் போது, கோவை ஆர்.எஸ்.புரத்தில் பலியானவர்களுக்கு, இந்து அமைப்பினர் மரியாதை செலுத்த உள்ளனர் என்பதால், அப்பகுதியில் கூடுதலாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.



குறிப்பாக, இரயில் நிலையம்,

கோவை பஸ் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நாள் முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். ரெயில் நிலையங்களில் டி.எஸ்.பி யாஷ்மின் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கிருஷ்ண லீலா தலைமையில் ரெயில்வே போலீசார் 30 பேரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் 30 பேரும் ரெயில் நிலையம் முழுவதும்மோப்ப நாய் உதவியுடன் சோதணை செய்து கண்காணித்து வருகின்றனர்.

இதற்கிடையே இன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால், பொழுது போக்கு இடங்கள், பூங்கா உள்ளிட்ட இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கோவை மாநகர் முழுவதும் தீவிர கண்காணிப்பில் உள்ளது என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...