கோவை சுகுணாபுரத்தில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பரிசு பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக புகார்; வாகனத்தை சிறைப்பிடித்த பொதுமக்கள்.

மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 90 மற்றும் 93  பகுதிகளுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்ததாக கூறப்படும் ஒரு மினிடோர் வாகனத்தை  பொதுமக்கள் சிறைப்பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: வரும் 19 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டு 90 மற்றும் 93பகுதிகளுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்ய வந்ததாக கூறப்படும் ஒரு மினிடோர் வாகனத்தைபொதுமக்கள் சிறைப்பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். 



கோவை குனியமுத்தூர் அடுத்த சுகுணாபுரம் பகுதியில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக என்று கூறப்படும் 300க்கும் மேற்பட்ட ஹாட் பாக்ஸ்கள் அடுக்கப்பட்ட மினிடோர் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய தான் கொண்டுவரப்பட்டதா? எந்த கட்சியினருக்கு உரியது? என்று குனியமுத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...