மங்களூரில் இருந்து ரெயில் மூலம் கோவைக்கு வந்த 1,324 டன் யூரியா; கோவை மாவட்டத்துக்கு 645 டன் ஒதுக்கீடு -  வேளாண்மை இணை இயக்குனர்.

கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 645 டன் உரத்தில், கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 392 டன்னும், தனியார் விற்பனை நிலையங்களுக்கு 253 டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது -


கோவை: மத்திய, மாநில அரசு சார்பில் மானியத்தில் வழங்கப்படும் யூரியா உள்ளிட்ட அனைத்து வகையான உரங்களும் சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து கோவைக்கு கொண்டு வரப்பட்டு கூட்டுறவு விற்பனை நிலையங்கள், தனியார் விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இந்நிலையில், மங்களூரில் இருந்து 1,324 டன் யூரியா சரக்கு ரெயில் மூலம் கோவைக்கு வந்துள்ளது. இதனை கோவை வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சித்ராதேவி உள்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 

பின்னர், கோவை மாவட்டத்துக்கு 645 டன், நீலகிரி மாவட்டத்துக்கு 424 டன், திருப்பூர் மாவட்டத்துக்கு 255 டன் உரம் லாரி மூலம் பிரித்து அனுப்பப்பட்டது. அதில், கோவை மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 645 டன் உரத்தில் கூட்டுறவு விற்பனை நிலையங்களுக்கு 392 டன்னும், தனியார் விற்பனை நிலையங்களுக்கு 253 டன்னும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்துவேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி கூறியதாவது:

மானிய விலை யூரியா விற்பனை செய்யும் போது விவசாயிகளின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தியே விற்பனை செய்ய வேண்டும். விவசாயிகளின் நிலம், பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் தன்மைப் பொறுத்து அதிகபட்சமாக 50 மூட்டைகள் வரை வழங்க வேண்டும்.

பி.ஓ.எஸ். கருவியில் பதிவு செய்த பின்னரே, உரங்களை விற்பனை செய்ய வேண்டும். வேளாண்மைத் துறையின் கீழ் உரிமம் பெற்ற உரக் கடைகளில் மட்டுமே விவசாயிகள் உரங்களை வாங்க வேண்டும். கூட்டுறவு, தனியார் விற்பனை நிலையங்களில் பெயர் பலகை, இருப்பு விவரம், விலை பட்டியல் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் பராமரிக்க வேண்டும். 

விதிமுறைகள் மீறி உரம் விற்பனை செய்வது தெரியவந்தால் உரக்கட்டுப்பாடு ஆணை மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...