கோவை சௌரிபாளையம் அருகே அரசு பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதல்; 3 பேர் பலி

கோவை சௌரிபாளையம் பகுதியில் அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.


கோவை : கோவை சௌரிபாளையம் பகுதியில் அரசு பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், மூவர் உயிரிழந்தனர். 

உப்பிலிபாளையம், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வரும் வழித்தடம் கொண்ட அரசு பேருந்து S-4, இன்று மாலைசௌரிபாளையம் பகுதி அருகே வந்த போது, பேருந்தும், ஆட்டோவும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில், ஆட்டோவில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

பலியான, இசக்கிமுத்து (23) கலைவானன் (23) பிரபாகரன் (50) ஆகிய மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லப்பட்டதுஆட்டோ டிரைவர் கௌதம் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.



இந்த விபத்தினால் சௌரிபாளையம் பகுதியில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது இந்த விபத்து குறித்து சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...