சோமனூரில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து: நூலிழையில் தப்பிய கார் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி

அரசுப் பேருந்து சாலையின் நடுவிலிருந்த இடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தை பின் தொடர்ந்து வந்த கார் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.


கோவை: அரசுப் பேருந்து சாலையின் நடுவிலிருந்த இடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தை பின் தொடர்ந்து வந்த கார் நூலிழையில் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

நேற்றைய தினம் இரவு சோமனூர் பவர் ஹவுஸ் பகுதியில் அரசு பேருந்து, பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் நடுவிலிருந்த தடுப்பின் மீது ஏறி ஒருபுறம் சாய்ந்தது.

அதிர்ஷ்டவசமாகப் பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் இருவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இந்நிலையில், பேருந்து விபத்துக்குள்ளாகும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.



அதில் பேருந்தை பின்தொடர்ந்து சென்ற கார் கண்ணிமைக்கும் நொடியில் சட்டென நிறுத்தப்பட்டதன் காரணமாக விபத்திலிருந்து தப்பிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதனையடுத்து, அன்னூரிலிருந்து வரவழைக்கப்பட்ட பேருந்து பணிமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இது தொடர்பாகத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...