கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறையில் வரதட்சணை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வங்கி மேலாளர் மீது மனைவி பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறையில் வரதட்சணை குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, வங்கி மேலாளர் மீது மனைவி பேரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறை ரோடு பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பவரின் மனைவி பிரதீபா (22). இவருக்குக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. கோகுல் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
திருமணத்தின் போது பிரதிபாவின் பெற்றோர் 10 பவுன் தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களை வரதட்சணையாகக் கொடுத்துள்ளனர்.
இந்நிலையில், பிரதீபாவிற்கும் அவரது கணவர் குடும்பத்தாருக்கும் இடையே வரதட்சணை குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மேலும் 100 பவுன் தங்கநகை வரதட்சணை வேண்டுமென கோகுல் மற்றும் அவரது தாயார் செண்பகவல்லி ஆகியோர் கேட்டு கொடுமைப் படுத்தியுள்ளனர்.
இதையடுத்து, பிரதீபா பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் பிரதிபாவின் கணவர் கோகுல் (27) மற்றும் அவரது தாயார் செண்பகவல்லி (48) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.