பணம் இருப்பவர்கள் டாக்டராகும் நிலையை நீட் தேர்வு மூலம் பா.ஜ.க மாற்றியது - பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு!!

கோவை ஆவாரம்பாளையம் 28 வது வார்டுக்கு உட்பட்ட ரெட்ரோஸ் பேக்கரி அருகே பா.ஜ.க வேட்பாளர் உண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



கோவை: கோவை ஆவாரம்பாளையம் 28 வது வார்டுக்கு உட்பட்ட ரெட்ரோஸ் பேக்கரி அருகே பா.ஜ.க வேட்பாளர் உண்ணாமலை அவர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



பிரச்சாரத்தில் அவர் கூறியதாவது; நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நீங்கள் போடும் ஓட்டு, உங்கள் வீட்டின் வாசலுக்கு யார் ஓடோடிவருவார்களோ அவர்களுக்கான ஓட்டு, 8 மாத கால திமுக ஆட்சியை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போலவே பார்க்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வந்த பின் முதல் ஒரு மாதம் கோவைக்குத் தர வேண்டிய கொரொனா ஊசியைக் குறைத்துக் கொடுத்தது. பா.ஜ.கவினர் எதிர்ப்பு தெரிவித்த பின்பே ஊசி வழங்கப்பட்டது. 8 மாதத்தில் திமுக செய்யாத ஊழல் கிடையாது. 27 பொங்கல் பொருள் கொடுத்தார்கள் ஆனால், ரேசன் கடைக்கு வெல்லம் வாங்க பக்கெட் எடுத்துச் சென்ற நிலை இருந்தது.



மஞ்சள் தூளுக்குப் பதிலாக மரத்தூள் , மிளகுக்குப் பதிலாகப் பப்பாளி விதை, பருத்திக் கொட்டை என கொடுத்தார்கள். மஞ்சப்பையின் விலை 60 ரூபாய்க்கு இந்த அரசு வாங்கி இருக்கின்றது. பையின் விலையை விட அதிலிருந்த பொருள்களின் விலை குறைவு.

8 மாசத்தில் 80 ஆண்டு கோபத்தை இந்த அரசு பெற்று இருக்கின்றது. தமிழக முதல்வர் பிரச்சாரத்திற்கு வராமல் கம்யூட்டரை பார்த்து பிரச்சாரம் மேற்கொள்கின்றார். வாக்குறுதியின் போது கொடுத்த 1000 ரூபாய் கேட்பார்கள் என்பதால் முதல்வர் ஸ்டாலின பிரச்சாரத்திற்கு வரவில்லை.

நகை எல்லாம் அடகு வைத்து மாதம் மாதம் வட்டி கட்டிக்கொண்டு இருக்கின்றனர். 73 சதவீதம் பேருக்கு நகை கடன் திரும்ப பெறவில்லை. 517 வாக்குறுதியில் 7 வாக்குறுதியை கூட இந்த அரசு நிறைவேற்றவில்லை. கோவை திமுக மீது நம்பிக்கை இல்லாமல் கரூர் திமுகவினர் வந்து பிரச்சினைகளை தீர்க்க போகின்றனர்.

கோவை மக்களுக்கு ஏதாவது செய்து வெற்றி பெற திமுக நினைக்கிறது. திமுகவை பொறுத்தவரை சமூக நீதி கிடையாது. பொது மக்கள் திமுகவிற்கு வாக்குகளை போடக்கூடாது. கம்யுனிஸ்ட் சித்தாந்தம் இறந்து போன சித்தாந்ந்தம்.20 ஆண்டுகளுக்கு முன்பு மினி ஜப்பான் என அழைக்கப்பட்ட பகுதி இது. இந்த ஊரை பழைய நிலைக்குக் கொண்டு வருவோம். கம்யூனிசம் புளித்து போன சிந்தாந்தம்.

உங்களுடைய வாக்கு திமுக கூட்டணிக்குப் போட்டு விடக்கூடாது. பா.ஜ.க வேட்பாளர் உண்ணாமலைக்கு வாக்களிக்க வேண்டும். திமுக பொறுத்த வரை கமிஷனை தாரகமந்திரமாகக் கொண்டு செயல்படும் அரசு. திமுக அமைச்சர்கள் குறித்து ஊழல் பட்டியல் கொடுக்க முடியும்.

உள்ளாட்சியில் நல்லாட்சி வர மனசாட்சி படி வாக்களிக்க வேண்டும். 2 லட்ச ரூபாய் சொந்த செலவில் சிசிடிவி கேமரா, குறைந்த விலையில் மருந்துகள், கொரொனா முதல அலையில் 60 நாட்கள் தினமும் உணவு கொடுத்தவர் என வேட்பாளர் உண்ணாமலை அதிகாரத்தில் இல்லாத போதே பல பணிகளைச் செய்தவர்.

பணம் இருப்பவர்கள் டாக்டராகும் நிலையை நீட் தேர்வு மூலம் பா.ஜ.க மாற்றியது. கூலி தொழிலாளி, விவசாயிகளின் மகள்கள் நீட் தேர்வால் சீட் கிடைத்து மருத்துவத்திற்குப் படிக்கின்றார்கள்.

கோவையில் பா.ஜ.க ஆதரவு இருக்கும் பகுதி. தேசியம் அதிகமாக இருக்கும் பகுதி. பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என பிரச்சாரம் நடத்தினார் பா.ஜ.கவின் மாநில தலைவர் அண்ணாமலை.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...