கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமித்து குப்பைகள் முறையாக அகற்றப்படும் - கோவை மாநகராட்சி 52வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி

மேலும், தான் வெற்றி பெற்றதும் புதிதாக சாலை அமைப்பது, பூங்காக்களை மேம்படுத்துவது போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.


கோவை: கூடுதல் தூய்மை பணியாளர்களை நியமித்து குப்பைகள் முறையாக அகற்றப்படும் என்று கோவை மாநகராட்சி 52வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி தெரிவித்தார்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 52வது வார்டு வெற்றி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் அவர்கள் போட்டியிடுகிறார்.

இவர் 52வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடியிருப்புகள் சென்று பொதுமக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து அவர்களுடைய குறைகளைக் கேட்டறிந்து, தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் என்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, 52வது வார்டுக்குட்பட்ட பெரியார் நகர், நெடுஞ்செழியன் நகர், பரமேஸ்வரன் லே அவுட், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.



உங்களுடைய அனைத்து விதமான கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தரப்படும், மேலும் 52வது வார்டு மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக செய்து கொடுக்கப்படும் என்றும் வார்டு 52 உட்பட்ட பகுதிகளில் கூடுதல் தூய்மை பணியாளர்கள் கொண்டு முறையாக குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதி அளித்தார்.



அதனை தொடர்ந்து, தான் வெற்றி பெற்றதும் இந்த பகுதியில் புதிதாக சாலை அமைப்பது, பூங்காக்களை மேம்படுத்துவது போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது கூறுகையில், தான் ஏற்கனவே இப்பகுதியில் மாமன்ற உறுப்பினராக இருந்தபோது 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை செய்து தந்தேன் என்றும், அதேபோல் தனது கணவர் நா.கார்த்திக் துணைமேயராக இருந்தபோது இந்த பகுதியில் வளர்ச்சி திட்டங்களை அதிகளவில் செய்துள்ளதாகவும், ஃபன்மால் அண்ணாநகர் திட்டச் சாலை சாலை அப்போது போடப்பட்டதாகவும் தெரிவித்தவர், தான் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவுடன் பாலன் நகர் - பெரியார் நகருக்கு இணைப்புச் சாலை அமைத்து தருவேன் என்றும், இப்பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை வசதி செய்து தருவேன் எனவும், இந்த வார்டை முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் என்றும் தெரிவித்தார்.

இந்த தேர்தல் பரப்புரையின் போது உடன் பீளமேடு பகுதிக் கழகம்-1 பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், திமுக மகளிரணி, சிபிஎம் ஜெயபால், கோவர்த்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...