திமுக அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றவில்லை..!! கோவையில் அதிமுக வேட்பாளர் சர்மிளா சந்திரசேகரை ஆதரித்து எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம்!

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுத்து இருந்தால், தற்போது வரை 10 ஆயிரம் கொடுத்து இருக்க வேண்டும் என்று பரப்புரை கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பினார்.


கோவை: கோவையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.



நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலையொட்டி, தமிழகம் முழுவதும்‌ அரசியல்‌ கட்சிகள்‌ சார்பில்‌ போட்டியிடும்‌ வேட்பாளர்கள்‌, வாக்காளர்களை கவர பல்வேறு யுத்திகளை கையாண்டு தீவிர வாக்கு சேகரிப்பில்‌ ஈடுபட்டு வருகின்றனர்‌.

இந்நிலையில், கோவையில் நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சி தேர்தலில் கவுண்டம்பாளையம், துடியலூர் ஆகிய பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.



இதனிடையே, கோவை மாநகராட்சி 38-வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளராக டாக்டர் ஷர்மிளா சந்திரசேகரை ஆதரித்து பேசிய அவர், ”அதிமுக ஆட்சியில் கவுண்டம்பாளையம் துடியலூர் பகுதியில் செய்து நீண்ட கால கோரிக்கையான மேம்பால திட்டங்களை கொண்டு வந்தோம். இந்த மேம்பாலங்கள் கட்டி முடிக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும். குடிநீர் திட்டம், சாலை வசதி, மேற்கு புறவழிச்சாலை, மெட்ரோ ரயில் திட்டம் அறிவிப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தோம். இதனை யாரும் மறுக்க முடியாது. அதனால் தான் கோவை மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுகவினரை மக்கள் வெற்றி பெற வைத்தனர். திமுகவிற்கு பூஜ்யம் தான் கிடைத்தது.



தற்போது உள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முக்கால்வாசி செய்து முடித்து விட்டோம் என்கின்றனர். ஆனால் திமுக அளித்த வாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை. குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் கொடுத்து இருந்தால், தற்போது வரை 10 ஆயிரம் கொடுத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அளித்த வாக்குறுதியை நம்பி தற்போது 8 மாணவ மாணவிகள் உயிரிழந்ததுள்ளனர். பொங்கல் பரிசு தொகுப்பில் அதிமுக ஆட்சியில் 2500 ரூபாய் தரப்பட்டது. திமுக ஆட்சியில் 100 ரூபாய் கூட தரவில்லை. மக்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். திமுக ஆட்சி மக்கள் ஏற்றுக் கொள்ளாத ஆட்சி. ஆனால் சூப்பர் முதல்வர் என விளம்பரம் செய்கின்றனர்.



திமுக ஆட்சியில் அதிகாரிகள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். காவல் துறையை திமுக தப்பாக பயன்படுத்துகின்றனர். காவல் துறையினரும் திமுகவிற்கு உடந்தையாக உள்ளன. இப்படியே இருந்து விடாது. தற்போது தேர்தல் வந்தால் திமுக அவுட். அதிமுக தான் வெற்றி பெறும். தேர்தல் நேரத்தில் மட்டுமே வரும் திமுகவினர் தேர்தல் முடிந்தால் சென்று விடுவார்கள். அதிமுக எம்.எல்.ஏ தான் மக்களுடன் இருந்து வேலை செய்வார்.



எம்.எல்.ஏ.விற்கு ஆண்டுதோறும் 3 கோடி தொகுதி நிதி வழங்கப்படுகிறது. அந்த நிதி விடுபட்ட பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீண்டும் நமது மேயர் வர வேண்டும். அப்போது தான் மக்களுக்கான திட்டங்களை கொண்டு வர முடியும். எனவே வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என அவர் தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...