கோவையில் தனது வார்டில் வீட்டுமனை பட்டா இல்லாத 220 பேருக்கு பட்டா பெற்று தருவதே எனது முதல் பணி - மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர்

மேலும், கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கோவையில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளதால் அதிமுகவிற்கு மக்கள் முழு ஆதரவை அளிப்பர் என்றார்.



கோவை: கோவையில் தனது வார்டில் வீட்டுமனை பட்டா இல்லாத 220 பேருக்கு வெற்றி பெற்றவுடன், அதனை பெற்று தருவதே எனது முதல் பணி என கோவை மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கிருபாலினி தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிடும் அதிமுக பெண் வேட்பாளரும் மேயர் வேட்பாளருமான கிருபாலினி கார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், கோவை மாநகராட்சி 7வது வார்டில் போட்டியிடுகிறேன். தனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மக்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக தேவையான திட்டங்களை கொண்டு வந்துள்ளது அதிமுக அரசு. அதனால் மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த 9 மாதங்களாக குடிநீர், சாலை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அல்லல்படுவதாக தெரிவித்த அவர், குறிப்பாக மாநகராட்சி சார்பில் தினசரி குப்பைகள் தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டுவதாகவும், வார்டு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு W7 என்ற புதிய செயலி அறிமுகம் செய்துள்ளதாகவும், ஆண்டிராய்டு போனில் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பிரச்சினைகளை பதிவிட்டால் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், தனது வார்டில் வீட்டு மனை பட்டா இல்லாத 220 பேருக்கு வெற்றி பெற்றவுடன் அதனை பெற்று தருவதே எனது முதல் பணி என்றார். மாநகராட்சி மேயர் வேட்பாளர் என்பதை கட்சியின் தலைமை தான் முடிவு செய்யும் என்றவர், அப்படி தனக்கு வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் வாகனங்களை பேட்டரி வாகனங்களாக மாற்ற நடவடிக்கை எடுத்து மாநகராட்சியை கிளீன் அண்ட் கிரீன் மாநகராட்சியாக மாற்றுவேன் என்று கூறினார்.

கோவையில் கடந்த 9 மாத காலமாக எந்த பணியும் நடைபெறவில்லை, தான் வாக்கு சேகரிக்கச் செல்லும் பகுதிகளில் எல்லாம் சாலை வசதிகள் மற்றும் குப்பைகள் அள்ளுவதில்லை போன்ற பிரச்சினைகளை மக்கள் பிரதானமாக கூறுவதாகவும் தான் வெற்றி பெறும் பட்சத்தில் இப்பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்த்து வைப்பேன் என்றார்.

மேலும், பொங்கல் பரிசு தொகை வழங்காததும் பரிசு தொகுப்பு தரமில்லாமல் இருந்ததும் மக்கள் மத்தியில் கொதிப்பை உருவாக்கியுள்ளது என்றவர், கடந்த பத்து ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் கோவையில் எண்ணற்ற திட்டங்களை கொடுத்துள்ளதால் அதிமுகவிற்கு கோவை மக்கள் முழு ஆதரவை அளிப்பர் என்றும் அதிமுக 100 வார்டுகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...