உதகை நகரப் பேருந்து நிலையத்தில் நண்பனை கொன்ற தொழிலாளி: சினிமா பாணியில் நடைபெற்ற கொடூரம்..!

பொதுமக்கள் கண்ணெதிரே சக நண்பனை சினிமா பாணியில் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில், படுகாயமடைந்த நண்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் போலீசார் உடனடியாக குற்றவாளியை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.


நீலகிரி:பொதுமக்கள் கண்ணெதிரே சக நண்பனை சினிமா பாணியில் சரமாரியாகக் கத்தியால் குத்தியதில், படுகாயமடைந்த நண்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் போலீசார் உடனடியாக குற்றவாளியை கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் உதகை மஞ்சனக்கொரை பகுதியில் வசித்து வருபவர் ஹரி மற்றும் கார்த்திக் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக இருவரும் ஒரே இடத்திற்கு வேலைக்குச் சென்று வரும் நிலையில், இன்று 12 மணியளவில் ஹரி மற்றும் கார்த்தி ஆகியோர் பேருந்திலிருந்து இறங்கி இருவரும் வாய்வார்த்தையால் விளையாடி வந்து உள்ளனர்.

அப்போது பொதுமக்கள் கண்ணெதிரே கார்த்திக் தனது சக நண்பர் ஹரியை சினிமா பாணியில் சரமாரியாகக் கத்தியால் குத்தி உள்ளார். இதில் படுகாயமடைந்த ஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பொதுமக்கள் காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த பி1 காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் உடனடியாக கொலை செய்த கார்த்திக் என்பவரை 15 நிமிடத்தில் கைது செய்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கடந்த ஆறு மாத காலமாக கார்த்திக் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சில மாதங்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து கருங்குரங்கு ஒன்றை ஹரிபிடித்து அதை வீட்டிற்குக் கொண்டு வந்து பொதுமக்கள் கண்முன்பு கத்தியால் அறுத்துள்ளார் பின்வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என விடுவிக்கப்பட்ட நிலையில், இன்று தனது சக நண்பனைக் கத்தியால் குத்திய சம்பவம் உதகையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...