கோவையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட மணி பர்ஸை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர். அதில் 3 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உட்பட பல்வேறு விதமான முக்கிய ஆவணங்கள் இருந்தன.
கோவை: கோவையில் சாலையில் கண்டெடுக்கப்பட்ட மணி பர்ஸை காவல்நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கோவையை சேர்ந்தவர் கார்த்திக் 20, இவர் இன்று கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தண்ணீர் டேங்க் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் ஒரு பர்ஸ் கிடப்பதை பார்த்து எடுத்தார். அதில் 3 ஆயிரம் ரூபாய் பணம், ஏடிஎம் கார்டு, பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, ஆதார் கார்டு உட்பட பல்வேறு விதமான முக்கிய ஆவணங்கள் இருந்தன.
உடனடியாக கார்த்திக் கோவை சரவணம்பட்டி காவல் நிலைய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் இடம் ஒப்படைத்தார். பர்சில் இருந்த செல் நம்பரை உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் அழைத்தார். அவர் தேனி மாவட்டம், ஓடைப்பட்டி ராயர் குல தெரு, பகுதியில் வாசிக்கக்கூடிய தங்கபாண்டியன் வயது 22, என்பதும் அவர் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து முடித்துவிட்டு காளம்பாளையத்தில் தங்கி வேலை தேடிக் கொண்டு இருந்ததும் தெரியவந்தது.
உடனடியாக அவரை காவல் நிலையம் அழைத்து கார்த்திக் கண்டெடுத்து கொடுத்த பரிசை அவர் முன்னிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தங்களிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து நேர்மையுடன் செயல்பட்ட வாலிபர் கார்த்திகை காவல்துறையினர் அனைவரும் பாராட்டினர்.