கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில், அனைத்து கட்சி வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்களை அழைத்து ‘நான் ஓட்டுக்குப் பணம் தரமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
கோவை: கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பாக ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டுதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதற்கு எதிராகத் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக வாக்காளர்களுக்குப் பணம் தருவதைத் தவிர்த்து, நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக ஓட்டுக்குப் பணம் கொடுக்க மாட்டேன் என அனைத்து கட்சி வேட்பாளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

சுந்தராபுரம் சங்கம் வீதி பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சுந்தராபுரம், குறிச்சி பகுதிகளில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ‘ஓட்டுக்குப் பணம் கொடுக்கமாட்டேன்’ என்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு, அமமுக, தேமுதிக, பாஜக, மக்கள் நீதி மய்யம், பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டு ‘ஓட்டுக்குப் பணம், நாட்டுக்கு அழிவு, நான் ஓட்டுக்குப் பணம் தரமாட்டேன்’ என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

நீட் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு அனைத்துக் கட்சி கூட்டங்கள் கூட்டுவதைப் போல, வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தவிர்த்துத் தேர்தல் நேர்மையாக நடக்க அனைத்து கட்சி வேட்பாளர்களை அழைத்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது என்றும் இதில் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றதாகவும் ஆனால் தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட கலந்து கொள்ளவில்லை எனவும் இது அக்கட்சியினர் பணம் கொடுத்து வெற்றி பெற முயற்சிக்கிறார்கள் என்பதை வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
தேர்தல் ஜனநாயகம் காப்பற்ற பட்டால் தான் நாட்டின் ஜனநாயகம் உயிர்ப்போடு இருக்கும். ஜனநாயகத்தைக் கொலை செய்து, எப்படியாவது எனது கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் போதும் என திமுகவும், அதிமுகவும் நினைக்கிறதா? வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பதால், அக்கட்சிகளில் உள்ள ஏழை வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. இது தவிர்க்கப்பட வேண்டும் என மறுமலர்ச்சி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈஸ்வரன் தெரிவித்தார். ஆனால் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் ஒருவர் கூட இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.