ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை அமைத்து தருவதாக கூறி ரூ. 3.95 கோடி மோசடி செய்த தம்பதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை..!

மேலும், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கோவை: ஈரோட்டில் ஈமு கோழி பண்ணை அமைத்து தருவதாக கூறி 3 கோடியே 95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தம்பதிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 2 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கோவை முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முனியன் மற்றும் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு ஸ்ரீ நித்யா ஈமு மற்றும் பவுல்டிரி பார்ம்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி ஈமு கோடி பண்ணை அமைத்து தருவதாக விளம்பரம் செய்தனர். இதனை நம்பி 244 பேர் இவர்களிடம் பணம் செலுத்தியிருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஈமு பண்ணைகள் அமைத்து தராத நிலையில், நாட்டுக்கோழி பண்ணை அமைத்து தருவதாகவும் கூறி பணத்தைப் பெற்று மோசடி செய்துள்ளனர். சுமார் 3 கோடியே 95 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் அளவிற்கு மோசடி செய்ததாக முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனை தொடர்ந்து முனியன், மாரியம்மாள், உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு கோவையில் உள்ள முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஏ.எஸ்.ரவி இன்று தீர்ப்பளித்தார்.

அதில், முனியன், மாரியம்மாள் ஆகிய இருவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், 2 கோடியே 44 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேரை விடுதலை செய்து உத்தரவிட்ட நீதிபதி, அபராத தொகையை 222 முதலீட்டாளர்களுக்கு திரும்ப அளிக்கவும் உத்தரவிட்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...