ஆம்புலன்ஸ் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வழக்கில் இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை - ரூ. 4 லட்சம் அபராதம்..!

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருட்கள் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.


கோவை: ஆம்புலன்ஸ் மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்திய வழக்கில், இளைஞர்கள் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்புடைய கஞ்சாவை கடத்துவதாக கோவை போதைப் பொருள்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், கடந்த 2019 அக்டோபர் 22ம் தேதி உடுமலையிலிருந்து கேரளாவுக்கு சென்ற ஆம்புலன்ஸை, உடுமலை மின்மயானம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர். அதில் சோதனை செய்தபோது 240 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுநரான உடுமலையைச் சேர்ந்த அருண்குமார் (24) பிடிபட்டார்.

உரிமையாளரான கருப்புசாமி (33) தப்பி ஓடிவிட்டார். விசாரணையில், ஆந்திர மாநிலத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அந்த கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

அதை பறிமுதல் செய்த போலீசார், கருப்புசாமியின் வீட்டில் சோதனை நடத்தி 13 மூட்டைகளில் இருந்த 260 கிலோ கஞ்சா மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பின்னர், கருப்புசாமியும் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருட்கள் தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், கருப்புசாமி, அருண்குமார் ஆகிய இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 4 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி என். லோகேஸ்வரன் நேற்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் வி.சிவகுமார் ஆஜரானார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...