கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஹெல்மெட் அணிந்துகொண்டு பிரச்சாரம்..!

76வது வார்டில் பிரச்சாரம் நடத்திய பொழுது பாரதிய ஜனதா கட்சியினர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டித்து பிரச்சாரம் செய்தனர்.


கோவை: கோவையில் பாரதிய ஜனதா கட்சியினர் ஹெல்மெட் அணிந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



வருகின்ற பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில் அனைத்து கட்சிகளும் கோவையில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு செல்வபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் 76வது வார்டு பிரச்சாரம் நடத்திய பொழுது பாரதிய ஜனதா கட்சியினர் மீது கல் வீசப்பட்டதைக் கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சியினர் பிரச்சாரத்தின் போது தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை பொது மக்களுக்குத் தெரியப்படுத்தும் விதமாகவும், இன்று செல்வபுரம் சாஸ்தா நகர் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஹெல்மெட் அணிந்துகொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.



மேலும், பெரும்பாலான இடத்தில் தொடர்ந்து இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் இதனை மேற்கொண்டதாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கூறினர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...