கோவை வ.உ.சி. பூங்காவை வேறு இடத்திற்கு மாற்றாமல் அதே இடத்தில் நிர்வகிக்க கோரிக்கை..!

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது.


கோவை: கோவை வ.உ.சி. பூங்காவை வேறு இடத்திற்கு மாற்றாமல், அதே இடத்தில் நிர்வகிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாநகராட்சி உயிரியல் பூங்காவை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள கடிதம் எழுதப்பட்ட சூழலில், பூங்காவை வனத்துறையினர் வேறு இடத்திற்கு மாற்றாமல் அதே இடத்தில் நிர்வகிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவுக்கான அங்கீகாரத்தை ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையம் சமீபத்தில் ரத்து செய்தது.

இதனையடுத்து, பூங்கா பராமரிப்பை தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையம் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கடிதம் எழுதப்பட்டது. மேலும், பூங்காவுக்கான கட்டமைப்புகளை உருவாக்கி வனத்துறை அதே இடத்தில் நிர்வகிக்க கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

தமிழகத்தில் உயிரியல் பூங்கா ஒன்று மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் பராமரிப்பு செய்யப்படுவது கோவையில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. உயிரியல் பூங்கா பராமரிப்பு குறித்து ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் அறிக்கையானது சமர்ப்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய சூழலில் ஒன்றிய உயிரியல் பூங்கா ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றும் அளவுக்கு நிபுணத்துவத்தை மாநகராட்சி பணியாளர்களிடம் எதிர்பார்க்க முடியாது.

அனைத்தையும் ஆலோசித்த பிறகே, வ.உ.சி. உயிரியல் பூங்காவின் பராமரிப்பை வருவாய் பகிர்வு அடிப்படையில் ஏற்றுக் கொள்ள தமிழக வனத்துறையின் கீழ் உள்ள உயிரியல் பூங்கா ஆணையத்துக்கு சில தினங்களுக்கு முன் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில், வனத்துறை இதே இடத்தில் கட்டமைப்புகளை உருவாக்கி பூங்காவை நிர்வகிக்கலாம் அல்லது, பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை வேறு இடத்திற்கு மாற்றலாம். இதுகுறித்த தெளிவான முடிவு எட்டப்படவில்லை. மீண்டும் அதே இடத்தில் வனத்துறை பூங்காவை செயல்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது, என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...