கோவையில் 5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்தது தொடர்பாக அ.தி.மு.க., வேட்பாளரின் கணவர் உட்பட இருவர் கைது..!

போலீசார் விசாரணையில் பழனியம்மாள் நிலத்துக்கு அருகே உள்ள மேலும் ஒரு ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.


கோவை: கோவையில் 5 கோடி ரூபாய் நிலத்தை அபகரித்தது தொடர்பாக, அ.தி.மு.க., வேட்பாளரின் கணவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், பேரூரை சேர்ந்த மாசாத்தியம்மாள் என்பவருக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலத்தை, நில உச்சவரம்பு சட்டத்தில், தமிழக அரசு கையகப்படுத்தியது.

இந்த நிலம், தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பழனியம்மாள் உள்ளிட்ட சிலருக்கு பிரித்து வழங்கப்பட்டது. பழனியம்மாள் பெயரில் இருந்த 51 சென்ட் நிலத்தை அபகரிக்க திட்டமிட்ட பேரூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த மாணிக்கம் (73), அவரது பெயரில் வாக்காளர் அட்டையை போலியாக தயார் செய்தார்.

போலியான ஆள் தயார் செய்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தி, பொது அதிகார பத்திரம் எழுதிக் கொடுத்ததுபோல், போலி ஆவணம் தயார் செய்து கொண்டார்.

கடந்த 2019ம் ஆண்டு மே 22-ல் இந்த ஆவணப்பதிவு நடந்துள்ளது. நிலத்தின் உரிமையாளரான பழனியம்மாள், 2011-ம் ஆண்டிலேயே இறந்து விட்ட நிலையில், போலி ஆவணப்பதிவு 2019ம் ஆண்டு நடந்துள்ளது.

இந்த போலி ஆவணத்தை பயன்படுத்தி, நிலத்தை குனியமுத்தூர் இடையர்பாளையம் பிரிவு குமரன் கார்டனை சேர்ந்த முருகவேல் (46) என்பவருக்கு விற்று விட்டார். மோசடி நடந்திருப்பதை அறிந்தபிறகும், முருகவேல், அந்த நிலத்தை வாங்கியுள்ளார்.

இந்த தகவல் வெளியான நிலையில், பழனியம்மாள் மகன் ராஜமாணிக்கம், கோவை எஸ்.பி., செல்வநாகரத்தினத்திடம் புகார் அளித்தார்.

பின்னர், எஸ்.பி., உத்தரவுபடி டி.எஸ்.பி., ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் மீனப்பிரியா விசாரணை நடத்தினர். இதில், போலி ஆவணம் தயாரித்து நிலத்தை அபகரித்த மாணிக்கம், அவரிடம் நிலத்தை வாங்கிய முருகவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மாணிக்கத்தின் மனைவி சரோஜினி, பேரூர் பேரூராட்சி தேர்தலில் 14ம் வார்டு அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார். பழனியம்மாள் நிலத்துக்கு அருகே உள்ள மேலும் ஒரு ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் மொத்த மதிப்பு 5 கோடி ரூபாயாகும்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...