கோவை நகர்புற உள்ளாட்சி தேர்தல் 2022: அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பிரச்சாரம்.

வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.


கோவை: வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், துடியலூர்பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பிரச்சாரம் மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம், துடியலூர் பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்வார்டு எண் 1-பத்மாவதி, 2- கே.மணி, 3- காயத்ரி, 12- விக்னேஷ், 14- சங்கீதா பிரகாஷ், 15- வனிதாமணி, 13- ரம்யா, 16- ரேவதி, 17-அம்பிகா, 33-ராஜேந்திரன், 34- மாரிமுத்து, 35- பாலசுந்தரம் ஆகியோரை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி, கடந்த அதிமுக ஆட்சியில் கண்ணம்பாளையம், துடியலூர் பகுதியில் செய்து கொடுக்கப்பட்ட மேம்பால திட்டம், குடிநீர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எடுத்துரைத்து பரப்புரை செய்தார்.



மேலும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்றுசுட்டிக்காட்டிய அவர்,. திமுகவாக்குறுதிகளில் எதுவும் நிறைவேற்றவில்லை. நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அவர்கள் அளித்த வாக்குறுதியை நம்பி தற்போது 8 மாணவ மாணவிகள் உயிரிழந்ததுள்ளனர், என்று குற்றம் சாட்டினார்.

பொங்கல் பரிசு தொகுப்பில் அதிமுக ஆட்சியில் 2000 ரூபாய் தரப்பட்டதாகவும், ஆனால், திமுக ஆட்சியில் 100 ரூபாய் கூட தரவில்லை என்று தெரிவித்த அவர்,காவல்துறையினர் திமுகவிற்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.



தற்போது, திமுக பற்றி மக்கள் புரிந்து கொண்டதால், இச்சமயம் சட்டமன்ற தேர்தல் வந்தால், திமுக தோல்வி அடைந்து, அதிமுக வெற்றி அடையும் என்று தெரிவித்தார். எனவே, வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சி வேட்பாளர்களுக்கு இரட்டை இலைச் சின்னத்தில் வாக்களித்து வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யவேண்டுமென முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி கேட்டுக் கொண்டார்.

பிரச்சாரத்தின் போது, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.அற.ஜி. அருண்குமார் உட்பட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் உடனிருந்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...