கோவை சூலூர் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் பலி..!

அத்துமீறித் தாக்குதல் நடத்தியது, சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை அருகே இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவத்தில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்த நிலையில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள போகம்பட்டி அடுத்த பொன்னாங்காணி பகுதியில் வசித்து வருபவர் மயில்சாமி, பால் வியாபாரியான இவர் சம்பவத்தன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியைச் சேர்ந்த கேசவன் என்பவர் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி உள்ளார்.

இதில் விற்பனைக்காக கொண்டு சென்ற பால் தெருவில் கொட்டி வீணாகியது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதனைத் தடுக்க வந்த மயில்சாமியின் குடும்பத்தினரும், கேசவன் குடும்பத்தினரும், சண்டையிட்டுக் கொண்டதால் இருதரப்புக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இந்த நிலையில், கேசவனை அவரது வீடு புகுந்து மயில்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கியதில் அவர், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்டமாக, பொன்னாங்காணி பகுதியைச் சேர்ந்த பாலகுரு, பூபதி, மயில்சாமி, மாரிமுத்து, மோகன்ராஜ், கணேஷ், செந்தில் ஆகிய 8 பேர் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியது, சாதிய வன்கொடுமை உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...