கோவைபுதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்கள் இணைந்து இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை: கோவை: கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மாவட்ட ஊழல் தடுப்பு கண்காணிப்புத் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆய்வுக் குழு அலுவலர்கள் இணைந்து இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தின் முகப்பு கேட்டுகளை அடைத்தனர். பின்னர், உள்ளே மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ1.55 லட்சம்பணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இதுகுறித்து மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.