கர்நாடகத்தில் நிகழ்ந்த ஹிஜாப் பிரச்சினை: கோவையில் திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கர்நாடகத்தில் நிகழ்ந்த ஹிஜாப் பிரச்சினையை கண்டித்து திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு சம்பவத்தைக் கண்டித்தும் கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: கர்நாடகத்தில் நிகழ்ந்த ஹிஜாப் பிரச்சினை திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.



நேற்று முன் தினம் கர்நாடக மாநிலத்தில்உள்ள கல்லூரி ஒன்றில்இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து செல்லும் பொழுது சில மாணவர்கள் காவி துண்டு அணிந்து அம்மாணவியின் பின்னால் ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கங்களை எழுப்பியவாறு சென்றனர்.

அப்பொழுது அந்தப் பெண் தனியாளாக அல்லாஹு அக்பர் என்ற முழக்கமிட்டபடி நடந்து செல்கிற வீடியோ நேற்று முதல் சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் வெளியான நிலையில் இச்சம்பவத்திற்கு பெரும்பாலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இச்சம்பவத்தைக் கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் எஸ்டிபிஐ, தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆதித்தமிழர் பேரவை உட்பட பல்வேறு அமைப்பினர் கலந்துகொண்டு சம்பவத்தைக் கண்டித்தும் கர்நாடக அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



மேலும் "மாணவர்களின் நெஞ்சில் மதவெறியைப் புகுத்தாதே, மாணவச் செல்வங்களை மதவெறி பாசிசத்திலிருந்து பாதுகாப்போம், இந்தியா பல்வேறு வண்ணங்களில் பூங்கொத்து அதனைக் காவி ஆக்காதே, அம்பேத்கரின் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம், அவள் உடை அவள் உரிமை அவள் நம்பிக்கை அவள் நாடு தடை போட நீ யார்?" ஆகிய பதாகைகளை ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.





Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...