வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்பு

கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றார்.



கோவை: கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்சீமான் பங்கேற்றார்.

நாம் தமிழர் கட்சியின் சார்பில்கோவை, நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில்போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்சீமான் பங்கேற்றார்.



முன்னதாக சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு அதிகமான வரவேற்பு உள்ளது என தெரிவித்தார். தேர்தல் எப்போதும் நியாயமான முறையில் நடந்ததில்லை எனக்கூறிய அவர், குப்பையில் குடியிருக்கவேண்டும் என்ற போது இருந்துதான் ஆகனும் எனவும் தெரிவித்தார்.



கேரளாவில் ஓரளவிற்கு முறையான தேர்தல் நடத்தப்படுகிறது என தெரிவித்த அவர், அண்ணாவே காங்கிரஸ் கட்சி பணம் கொடுத்ததை விமர்சித்துப் பேசி இருக்கின்றார் எனவும் தெரிவித்தார்.

சாலையில் செல்பவர்களிடம் பணத்தைப் பறிக்கும் பறக்கும் படை, வீட்டுக்கு வீடு ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத்தடுத்து நிறுத்தவில்லையே ? என கேள்வி எழுப்பினார்.

கர்நாடகாவில் ஹிஜாப் அணியத் தடை விதிப்பவர்கள், இந்து என்றால் எல்லாரும் பூணூல் அணிய வேண்டுமே அணிகின்றார்களா, எல்லாரையும் கருவறைக்குள் விடுகின்றார்களா எனவும் கேள்வி எழுப்பினார். பிராமணர்கள் பூணூல் அணியாமல் பள்ளிக்குச் செல்வார்களா? சீக்கியர்கள் தர்பன் அணியாமல் ராணுவத்தில் இருக்க வேண்டும் என சொல்லும் தைரியம்மோடி அரசுக்கு உண்டா எனவும் கேள்வி எழுப்பினார்.

பெண்கள் பர்தா அணிவது நீண்ட காலமாக இருக்கின்ற நடைமுறை எனக்கூறிய அவர், போராட்டம் நடத்தியவர்கள் அழைத்து வரப்பட்ட கூட்டம் எனவும் அவர்கள் யாரும் உளமார காவித்துண்டை அணியவில்லை எனவும் தெரிவித்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் இயற்கை வளங்கள் சுரண்டப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலை அழிக்கப்படுகின்றது. தனி ஒரு முதலாளிகளுக்காக இயற்கை அழிக்கப்பட்டு வருகிறது எனவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.







Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...