எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் மக்களுக்குக் கொடுத்துக் கொடுத்து பழக்கப்பட்டவர்கள், திமுகவினருக்கு மக்களிடம் இருந்து எடுத்து தான் பழக்கம் என திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் மக்களுக்குக் கொடுத்துக் கொடுத்து பழக்கப்பட்டவர்கள், திமுகவினருக்கு மக்களிடம் இருந்து எடுத்து தான் பழக்கம் என திருப்பூரில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிமுக சார்பில் 407 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

இவர்களை அறிமுகம் செய்து வைத்து, கட்சியினருக்கு ஆலோசனை வழங்கும் கூட்டம் இன்று திருப்பூரில் நடைபெற்றது.

இதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதிமுகவினரிடம் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக, எந்த கொம்பனாலும் வெல்ல முடியாத எஃகு கோட்டையாக நம் இயக்கத்தை உருவாக்கி நம்மிடையே தந்துள்ளார்கள் என குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவிற்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமி ஆட்சி பொறுப்பேற்றுச் சிறு குண்டுமணி அளவு கூட குறையாத வகையில் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன என்றவர், கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிய ஒரே தலைவர் ஜெயலலிதா தான் என கூறினார்.
திருப்பூருக்கு நிறைவேற்றிய திட்டங்கள் குறித்துப் பேசிய போது, குடிநீர் திட்டங்கள், மருத்துவக்கல்லூரி, பாதாளச் சாக்கடை திட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார். கொரோனா காலத்தில் மக்களுக்குச் சிறப்பான உதவியை வழங்கியது அதிமுக என்றும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றவர்கள் மக்களுக்குக் கொடுத்துக் கொடுத்து பழக்கப்பட்டவர்கள்.

திமுகவினருக்கு மக்களிடம் இருந்து எடுத்துத் தான் பழக்கம் என விமர்சித்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 வது முறையாக ஆட்சி அமைக்கும் நிலை இருந்தது. ஆனால் திமுகவினர் பொய்யான வாக்குறுதிகளை அளித்து மக்களை ஏமாற்றி விட்டனர் என்றவர் , நீட் விவகாரம், மாதம் 1000 ரூபாய், 100 நாள் வேலைத் திட்டம் 150 நாளாக மாற்றப்படும் என கூறியது எவையும் நிறைவேறவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பில் ரூ.2500க்கு பதிலாக 5 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னார் ஸ்டாலின். ஆனால் அவர் தற்போது பணம் கொடுக்கவில்லை. தொகுப்பிற்கான பொருட்களும் வடமாநிலங்களிலிருந்து வாங்கப்பட்டுள்ளது என்றும், இவர்கள் கொடுக்கும் அரிசியை நம்மால் சாப்பிட முடியவில்லை என ஆடு மாடுகளுக்குக் கொடுத்தால் அதுவும் நம்மை மொறைக்கின்றது என விமர்சனம் செய்தார். தினமும் காலை விடிகின்றது, ஆனால் மக்களுக்கான விடியல் கிடைக்கவில்லை என்றும் பேசினார்.