தேர்தல் நடத்தும் முறையை பற்றியும், வாக்கு மையத்தில் பின்பற்ற வேண்டியவற்றைப் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் நகர்ப்புற தேர்தல் தேதி அறிவித்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அரசு கலைக்கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமில் வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ் தலைமையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வால்பாறை நகராட்சி எல்லைக்கு அடுத்து உள்ள ஆனைமலை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் இருந்து தேர்தல் பணிக்காக அலுவலர்களை அழைத்திருந்தனர். இதில் சுமார் 300 தேர்தல் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தேர்தல் நடத்தும் முறையை பற்றியும் வாக்கு மையத்தில் பின்பற்ற வேண்டியவற்றைப் பற்றியும், தேர்தலைப் பின்பற்ற வேண்டிய வழி நெறிமுறைகளையும், ஓட்டு இயந்திரம் எவ்வாறு செயல்படுத்த வேண்டும், தேர்தல் வாக்கு சேகரிப்பு மையத்தில் வாக்கு இயந்திரம் செயல்பாட்டு முறையைப் பற்றியும் வாக்கு மையத்தில் வாக்காளர்கள் வாக்கு செலுத்திய பின் வாக்கு இயந்திரத்தை சீல் வைப்பது என்று வீடியோ ஒளிப்பதிவு மூலம் அலுவலக பணியாளர்களுக்கு பயிற்சி நடைபெற்றது.