தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் உள்ள பத்திரிகை ஊடகங்களும் பாராட்டும் வகையில் சிறந்த ஆட்சியை முதல்வர் நடத்துவதாக தெரிவித்தார்.
கோவை: கோவையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் மக்கள் திமுகவுக்கு வாக்களிக்க தயாராகிவிட்டார்கள் என்று பொள்ளாச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் 8 திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நிலையில் திமுக பேரூராட்சியை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், இன்று மற்ற வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

ஏற்கனவே, திமுக இந்த பேரூராட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் மற்ற அனைத்து வார்டுகளிலும் திமுக உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர், பொள்ளாச்சி ராஜேஸ்வரி திடலில் நடைபெற்ற கூட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் 36 வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது:-

கடந்த 8 மாத கால திமுக ஆட்சியில் பல்வேறு சாதனைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள முதலமைச்சர்களுக்கெல்லாம் முன்னோடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி வழங்கி வருகிறார்.
தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் உள்ள பத்திரிகை ஊடகங்கள் பாராட்டும் வகையில் சிறந்த ஆட்சியை முதல்வர் நடத்தி வருகிறார். இதற்கு மக்கள் மகத்தான வரவேற்பு அளித்து வருகின்றனர்.
ஏற்கனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல், 9 மாவட்ட தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, முதல்வரின் சாதனை திட்டங்களுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகிவிட்டார்கள். 100% நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வரதராஜன், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.