திருப்பூரில், 2011ம் ஆண்டு வரை செயல்பட்ட 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம் 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது.
திருப்பூர்: 'பாசி' நிறுவன மோசடி வழக்கில் தீர்ப்பு அளிக்க, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
திருப்பூரில், 2011ம் ஆண்டு வரை செயல்பட்ட, 'பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்' என்ற ஆன்லைன் நிதி நிறுவனம், 1,433 பேரிடம், 870 கோடி ரூபாய் முதலீடு பெற்று மோசடி செய்தது.
இதையடுத்து, அந்நிறுவன இயக்குனர்கள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகியோர், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் கதிரவன், கடந்தாண்டு இறந்தார்.
இந்த வழக்கின் விசாரணை கோவை டான்பிட் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் சி.பி.ஐ., தரப்பு சாட்சி விசாரணை நிறைவடைந்து, இரு தரப்பு வாதத்துக்கு 'வாய்தா' போடப்பட்டது. எதிர்தரப்பு வக்கீல்கள் வாதிடாமல், தொடர்ந்து அவகாசம் கேட்டு வந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரு தரப்பு வாதம் நடந்து முடிந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது.
அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவு நகல் ஒன்றை நீதிபதியிடம் கொடுத்த எதிர் தரப்பு வக்கீல், 'இவ்வழக்கில், விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளிக்க, மார்ச் 31 வரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது' என தெரிவித்தார். உத்தரவு நகலை பார்த்த நீதிபதி ரவி, வழக்கை ஏப்ரல் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.