பூங்காக்கள், இணைப்பு சாலைகள், கூடுதல் தூய்மை பணியாளர்கள் என வார்டு 52 ஐ கோவை மாநகராட்சியின் முன்மாதிரியான வார்டாக மாற்ற பாடுபடுவேன் - திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி

அடிப்படை வசதிகள் முதல் பூங்கா போன்ற தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றும் 52 வது வார்டு மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக செய்து கொடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


கோவை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கோவை மாநகராட்சியின் 52 வது வார்டு திமுக வேட்பாளர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழகத்தில் 19-2-2022 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சியில் 52 வது வார்டு வெற்றி வேட்பாளராக திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் போட்டியிடுகிறார்.

அப்பகுதி மக்கள் அவரிடம் வைத்த முக்கிய கோரிக்கையான முறையாக குப்பை அகற்றுதல் குறித்து கேட்டறிந்த அவர், தூய்மை பணிகள் துரிதமாக மற்றும் முறையாக நடக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பின்னர், அங்கு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களிடம் துடப்பத்தை வாங்கி அவரே குப்பைகளை அகற்றினார்.



திமுக வேட்பாளர், இலக்குமி இளஞ்செல்வியின் செயலை பார்த்த, குடியிருப்பு வாசிகள், அவரை வெகுவாக பாராட்டினார்.



அதன் ஒரு பகுதியாக, 52வது வார்டுக்குட்பட்ட பெரியார் நகர், நெடுஞ்செழியன் நகர், பரமேஸ்வரன் லே அவுட், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட அவர், அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை சந்தித்து அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.



அடிப்படை வசதிகள் முதல் பூங்கா போன்ற தேவைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் என்றும் மேலும் 52 வது வார்டு மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு சிறப்பாக செய்து கொடுக்கப்படும் என்றும் தான் வெற்றி பெற்றதும் 52 வது வார்டில் புதிதாக சாலை அமைப்பது பூங்காக்களை மேம்படுத்துவது போன்ற பணிகள் உடனடியாக மேற்கொள்ளப்படும், என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து, நம்மிடம் பேசுகையில், "நாம் ஏற்கனவே இப்பகுதியில் மாமன்ற உறுப்பினராக இருந்தபோது 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகளை செய்து கொடுத்துள்ளேன். அதேபோல், எனது கணவர் முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், துணைமேயராக இருந்தபோது இந்த பகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செய்துள்ளார்.

குறிப்பாக, ஃபன் மால், அண்ணாநகர் திட்டச் சாலை சாலை அந்த காலகட்டத்தில் போடப்பட்டதாகவும் தெரிவித்த அவர், "நான் மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவுடன் பாலன் நகர் - பெரியார் நகருக்கு இணைப்புச் சாலை அமைத்து தருவேன். இப்பகுதியின் நீண்ட நாள் கோரிக்கையான பாதாள சாக்கடை வசதி செய்து தந்து, 52 வார்டை கோவை மாநகராட்சியின் முன்மாதிரியான வார்டாக மாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

குறிப்பாக, வார்டு 52ல் கூடுதல் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, தினசரி குப்பைகள் அகற்றப்படும் என்று உறுதியளித்தார். இதை கேட்ட அப்பகுதி தூய்மை பணியாளர்கள், அவ்வாறு செய்தால் தங்களின் பணிசுமை பெரிய அளவில் குறையும் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.

தேர்தல் பரப்புரையின் போது, பீளமேடு பகுதிக் கழகம்-1 பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், மா.ரவி, சிங் கை பிரபாகரன் Ex mc, சின்னமணி, மகளிர் அணியினர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...