தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் சேரன்மாநகர் வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டி: மக்களிடம் அறிமுகம் இல்லாத திமுக, அதிமுக வேட்பாளர்கள்!

நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.


கோவை: நடைபெற உள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சி 22வது வார்டுக்குட்பட்ட சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் தபால்காரர், இறைச்சிக் கடைக்காரர் உள்ளிட்டோர் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

இந்த வார்டில் மொத்தம் 58 குடியிருப்பு நகர்கள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 700 ஆக உள்ளது. இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகத் தபால்காரர், மாரியப்பன் போட்டியிடுகிறார். இதேபோல் நாம் தமிழர் கட்சி சார்பில் சசிகுமார் என்ற இறைச்சிக் கடை நடத்தி வருபவர் போட்டியிடுகிறார்.

இவர்கள் இருவரும் மக்கள் மத்தியில் கொண்ட அறிமுகம் கூட திமுக, அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு இல்லை. திமுக சார்பில் கோவை பாபு என்கிற செல்வகுமார் போட்டியிடுகிறார்.

இதேபோல் அதிமுக சார்பில் சண்முகசுந்தரம் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரும் கட்சியினர் மத்தியில் நன்கு அறிமுகம் பெற்றவர்களாக இருந்தாலும் வாக்காளர்கள் மத்தியில் அறிமுகம் மிகக் குறைவாக உள்ள வேட்பாளர்களாக இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

எனவே இந்தத் தேர்தலில் இரு வேட்பாளர்களுக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் சின்னம் அவர்கள் பெரும் வாக்குகளில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த வார்டில் போட்டியிடும் வேட்பாளரும் மக்கள் மத்தியில் அதிக அறிமுகம் இல்லாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...