கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் 3,900 கிராம் தங்க ஆபரணங்கள் பறிமுதல்

கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.



கோவை: கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற ரயிலில் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களை சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சேலம் பிரிவு ஆர் பி எஃப் சப் இன்ஸ்பெக்டர் அணில் குமார் ரெட்டி தலைமையில், ஈரோட்டில் கோவையிலிருந்து சென்னை சென்ற ரயிலில் டி 4 கோச்சில் சோதனை செய்தனர்.

அப்போது கோவை செல்வபுரம் சரோஜினி நகர் பகுதியில் வசிக்கக்கூடிய அழகிரி 46 என்பவர் கணக்கில் வராத 3,900 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்களைக் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்குக் கொண்டு செல்வது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சேலம் ஆர் பிஎஃப் அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சேலம் ரோவிங் ஸ்குவாட் ஸ்ரீ ஆர் பிரகாஷ் மாநில வரி அதிகாரியிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார்.

அந்த ஆபரணத் தங்கத்தின் மொத்த மதிப்பு கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 200 ஆகும்.

அவர் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்த மதிப்பு 10 லட்சத்து 71 ஆயிரத்து 252 ஆகும். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...