கோவை மாநகராட்சியில் கடந்த கால ஆட்சியைப் போல் இல்லாமல், தூய்மையான நிர்வாகம் வழங்கப்படும் - பிரச்சாரத்தின் போது அமைச்சர் செந்தில்பாலாஜி பேச்சு..!

திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார். அதன்படி, இன்று ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.



கோவை: கோவை மாநகராட்சி தேர்தல் வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, திமுக வேட்பாளர்களை ஆதரித்து, கோவையில் தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றார்.



அதன்படி, இன்று ராஜவீதி, செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டார்.



கோவை ராஜவீதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், திமுக அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி, மக்களிடம் ஆதரவு கோரினார்.



பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "கடந்த கால ஆட்சியில், கோவை மாநகராட்சியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்ததாகச் சுட்டிக்காட்டிய அவர், திமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், கோவை மாநகராட்சியில் தூய்மையான நிர்வாகம் அமைக்கப்படும், என்று உறுதியளித்தார்.

மேலும், வீடுகள் கட்டுவதற்கு மக்கள் எதிர்கொண்டு வந்த அனுமதி கிடைக்காத நிலை மாற்றப்படும் எனவும், விரைவாக வீடு கட்ட ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பிரச்சாரத்தின் போது, அவருக்கு திமுக மகளிர் அணியினர் சால்வை அணிவிக்க வந்த போது, பெண் குழந்தை ஒன்றைக் கையில் வாங்கிக் கொண்டு, அவர்களின் வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்டார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...