கோவை கோனியம்மன் கோவில் தேர் திருவிழா: வரும் 14-ம் தேதி முகூர்த்த கால் நடும் விழாவுடன் கோலாகல துவக்கம்

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா வருகிற 14-ஆம் தேதி திங்கட்கிழமை முகூர்த்த கால் நடும் விழாவுடன் தொடங்கவுள்ளது.


கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தேர் திருவிழா வருகிற 14-ஆம் தேதி திங்கட்கிழமை முகூர்த்த கால் நடும் விழாவுடன் தொடங்கவுள்ளது.

தொடர்ந்து, 15- ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன், தேர் திருவிழா நடக்கவுள்ளது. 21-ந் தேதி கிராமசாந்தி, 22-ஆம் தேதி கொடியேற்றமும், இரவு 7.30 மணிக்கு அக்கினிச்சட்டி விழா நடக்கிறது. அதே போல், 23-ஆம் தேதி புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும் என தொடர் நிகழ்வுகள் நடைபெறவுள்ளது

மேலும், 24-ஆம் தேதி கிளி வாகனம், 25-ஆம் தேதி சிம்மவாகனம் 26-ந் தேதி அன்ன வாகனம், 27 -ஆம் தேதி காமதேனு வாகனத்திலும்,

28-ந் தேதி வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடக்கும்.

பின்னர், மார்ச் 1-ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் மார்ச் 2-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜவீதி தேர் நிலைத் திடல்லிருந்து புறப்படும் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, வைசியாள் வீதி, வழியாக மீண்டும் தேர் திடலை அடையும் இதனை தொடர்ந்து மார்ச் 3ஆம் தேதி பரிவேட்டை குதிரை வாகன உலா 4 -ம் தேதி தெப்ப உற்சவம் மற்றும் 5 ஆம் தேதி தீர்த்தவாரி கொடி இறக்க நிகழ்ச்சியும் நடக்கிறது.

மேலும், மார்ச் 6-ஆம் தேதி நடக்கும் வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் தலைவர் செல்வம் பெரியசாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...