கொரோனா பரவல் குறைந்தாலும் மாநகராட்சி பகுதிகளில் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரம்

கோவையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகின்ற போதிலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


கோவை: கோவையில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வருகின்ற போதிலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ளவர்களுக்குச் சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் பகுதியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட இடங்களில் தினமும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இது தவிர கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா? போன்ற கொரோனா தொற்றைக் கண்டறியும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா பரவல் மிகவும் குறைந்துள்ளது. கொரோனா பரவல் சதவீதம் தற்போது 3.31 ஆக உள்ளது. ஆனாலும் வீடு, வீடாகச் சென்று சளி, காய்ச்சல் கண்டறியும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை மாநகராட்சி பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று கொரோனா அறிகுறி உள்ளதா? என ஆய்வும் செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,’’ என்றார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...