கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதிய ரீதியான தாக்குதல் நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார்..!

நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் தங்களையும், வாகனத்தையும் அடித்து நொறுக்கியதில் தனது கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.


கோவை: கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர்கள் சாதிய ரீதியான தாக்குதல் நடத்துவதாக கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.



கோவை மாவட்டம் பொன்னாகானி பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

அவர் அளித்த மனுவில், கடந்த ஜனவரி 7ம் தேதி தனது கணவர் ராமு வேலை முடித்துவிட்டு வரும் பொழுது தனது கணவரின் வண்டியின் மீது போகம்பட்டி பகுதியை சேர்ந்த கொங்கு வேளாளர் கவுண்டர் சாதியைச் சேர்ந்த மயில்சாமி என்பவரது இருசக்கர வாகனம் உரசி சென்றதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த சாதியினர் 20 பேர் தனது வீட்டிற்கு வந்து தாக்கியதாகவும், தாங்கள் சத்தம் போட்டவுடன் அக்கம்பக்கத்தினர் திரண்டு தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார்.



மேலும், இதனை மனதில் வைத்துக் கொண்டு தொடர்ந்து தங்களை மிரட்டி வந்ததாகவும் இரு தினங்களுக்கு முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த நபர்கள் ஊருக்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் தங்களையும் தங்கள் வீட்டையும் வாகனத்தையும் அடித்து நொறுக்கியதில் தனது கணவர் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எங்கள் பகுதிக்கு தண்ணீர் விடுவதற்கும் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கும் ஆதிக்க சாதியினர் தடை செய்து வருவதாகவும், இதனால் எங்கள் பகுதி மக்கள் பயத்தோடு இருந்து வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதில் கவனம் செலுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டிருந்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...