கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த நலத்திட்ட பணிகளால் அதிமுக மகத்தான வெற்றிபெறும் - மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வேட்பாளர்

எஸ்.பி.வேலுமணி செய்த நலத்திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு சென்றாலே மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என கிருபாலினி கார்த்திகேயன் தெரிவித்தார்.



கோவை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் கோவை மாவட்டத்தில் செய்த நலத்திட்ட பணிகளை மக்களிடம் கொண்டு சென்றாலே கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான வெற்றிபெறும் என மாநகராட்சி 7வது வார்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கிருபாலினி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.



கோவை மாநகராட்சி 7வது வார்டிற்குட்பட்ட பி.எல்.எஸ். நகர் பகுதிகளில் வீடு, வீடாக துண்டு பிரசுரங்களை கொடுத்து இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் கிருபாலினி கார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார். 



அவருக்கு, அப்பகுதி மக்கள் சிறப்பாக வரவேற்பு அளித்து, கலந்துரையாடினார்.



அவருடன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் செந்தில் கார்த்திகேயன் மற்றும் கல்லூரி மாணவர்கள், கழக தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர்.



அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சென்றாலே, 7வது வார்டு மட்டுமல்லாமல் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான முழுமையான வெற்றியை பெரும் என்று உறுதிபட தெரிவித்தார்.

மேலும், 7வது வார்டை பொறுத்தவரை 1 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நவீன பூங்கா மற்றும் தனது சொந்த செலவில் பி.எல்.எஸ் நகர் பகுதியில் போர் அமைத்து குடிநீர் வசதிகள் செய்து கொடுத்துள்ளதாக கிருபாலினி கார்த்திகேயன் தெரிவித்தார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சியில் 7வது வார்டு பகுதிகளில் எல்லா இடங்களிலும் எல்.இ.டி.விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நடைபெற உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில் கோவை மாநகராட்சி 100 வார்டுகளிலும் அதிமுக மகத்தான வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்தார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...