கோவையில் 34வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் ஆர்மோனியம் இசைத்தபடி வாக்கு சேகரிப்பு..!

வாரத்துக்கு ஒருமுறை வார்டு மக்களை சந்தித்து மக்களின் குறைகளை மனுவாக பெற்று, அவர்களின் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.



கோவை: கோவையில் 34வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் ஆர்மோனியம் இசைத்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.



நகர்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெறும் நிலையில், அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கோவை அரசியல் களம் திருவிழாக்கோலம் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து பலரும் வாக்கு சேகரிப்பில் அனைத்து வேட்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர்.



இந்நிலையில், 34வது வார்டில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மகேஸ்வரன் ஆர்மோனியம் இசைத்தபடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கண்ணப்பநகர் பகுதியில் வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்த இவர், தூய்மை பணியாளர்களிடம் அவர்களுக்கு தேவையானவற்றை செய்து தருவதாக உறுதி அளித்தார்.



மேலும், தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளுக்கு தெருவிளக்கு அமைத்து தருவதாகவும், பகுதிகளில் தேங்கும் குப்பைகளை உடனடியாக அகற்றுவதாகவும், வாரத்துக்கு ஒருமுறை வார்டு மக்களை சந்தித்து மக்களின் குறைகளை மனுவாக பெற்று அவர்களின் மனுக்களுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.



Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...