ஒருவருக்கு மூன்று பணி நியமன கடிதம் வந்திருந்தால், இரண்டு கடிதங்களை திரும்ப ஒப்படைத்து விடலாம் என கோவை மாநகராட்சியின் தேர்தல் பிரிவினர் விளக்கம்.
கோவை: கோவையில் தேர்தல் பணியில் ஈடுபடும் அங்கன்வாடி ஊழியர்கள் பலருக்கு, மூன்று இடங்களில் பணிபுரிவதற்கான கடிதம் வந்துள்ளதால் அங்கன்வாடி ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பணியில் ஆசிரியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் என 6,192 நபர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்காளர்களிடம் பூத் ஸ்லிப் ஒப்படைத்தல் போன்ற பணிகளை அங்கன்வாடி ஊழியர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
இதனிடையே, அங்கன்வாடி ஊழியர்கள் பலருக்கு, மூன்று இடங்களில் பணிபுரிவதற்கான கடிதம் வந்துள்ளதை அடுத்து ஒரே சமயத்தில் வெவ்வேறு பகுதிகளில் தேர்தல் பணி செய்வது என்பது இயலாத காரியம் என்பதால் அங்கன்வாடி ஊழியர்கள் இடையே குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அங்கன்வாடி ஊழியர் ஒருவர் கூறுகையில்;
இது குறித்து மாநகராட்சி தேர்தல் பிரிவு அதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் சென்றுள்ளோம். மேலும், எங்கள் பகுதிக்கு அருகே உள்ள அங்கன்வாடியில் பணி வழங்க கோரியுள்ளோம். தேர்தல் பணியில் வாய்ப்பு கிடைக்காமல் பலரும் உள்ள நிலையில், இந்த பணிநியமன கடிதத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளோம் என்றனர்.
இது குறித்து கோவை மாநகராட்சியின் தேர்தல் பிரிவினர் கூறுகையில்;
ஒருவருக்கு மூன்று பணி நியமன கடிதம் வந்திருந்தால் இரண்டு கடிதங்களை திரும்ப ஒப்படைத்து விடலாம். தேர்தல் விதிமுறையின்படி, ஒரே தொகுதியில் தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்கள் பணிபுரியமுடியாது. எனவே, வெவ்வேறு பகுதிகளுக்கு அங்கன்வாடி ஊழியர்களை நியமித்துள்ளோம். தேர்தல் பணி ஒதுக்கீடு செய்யாத நபர்கள், ஆர்வம் இருக்கும் நிலையில் தாமாக முன்வந்து பணியில் ஈடுபடலாம் என்று தெரிவித்தனர்.