கோவை வேளாண் பல்கலைக்கழக கவுன்சிலிங் தற்காலிகமாக ஒத்திவைப்பு..!

நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 2021 - 22ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கவுன்சில் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக முதன்மையர் மற்றும் மாணவர் சேர்க்கை தலைவர் கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் 12 இளநிலை பட்டப்படிப்புகள் 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெறப்பட்டன.

சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன நிலையில் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

இதையடுத்து, வரும் 11-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நிர்வாக காரணங்களினால் இளம் அறிவியல் பட்டப் படிப்பிற்கான கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, அதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் இவ்வாறு கல்யாணசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...