விசைத்தறி உரிமையாளர்கள் 31வது நாளாக வேலை நிறுத்தம்..! திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி..!!

வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து தங்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.


கோவை: கூலி உயர்வு கோரி விசைத்தறி உரிமையாளர்கள் 31வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை துவங்கினர்.

31வது நாளாக வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில், 1800 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து தங்களுக்கு கூலி உயர்வு பெற்றுத் தர வேண்டும் என விசைத்தறி உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் அரசு தரப்பு என முத்தரப்பு பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் வினித் தலைமையில் நடைபெற்றது.



சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கூலி உயர்வை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்புதல் தெரிவிக்காததால் முடிவு எட்டப்படாமல் கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சோமனூர் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிச்சாமி கூறுகையில், கடந்த 2014ம் ஆண்டுக்கு பிறகு கூலி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதாகவும், அனைத்து மூலப்பொருட்கள் மற்றும் அடிப்படை பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது.



ஆனால், நியாயமான கூலி உயர்வை வழங்க ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுப்பதாகவும், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் எனவும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து கூட்டுக்கமிட்டி கூட்டத்தில் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...

வால்பாறை அணையில் மூழ்கி 21 வயது இளைஞர் உயிரிழப்பு: தேடுதல் பணி தீவிரம்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அம்பலபார அணையில் நேற்று 21 வயது இளைஞர் தனுஷ் மூழ்கி காணாமல் போனார். திருமண நிகழ்ச்சிக்கு வந...

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் நியாய விலை கடை, சாக்கடை சுத்தம், குப்பை...

திருப்பூரில் கோயில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு; சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தேடல்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே எருக்கலாங்காடு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயிலில் உண்டியல் உடைத்து பணம் தி...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி...